/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்த கட்டடத்தில் ரேஷன் கடை: அச்சத்தில் மக்கள்
/
சேதமடைந்த கட்டடத்தில் ரேஷன் கடை: அச்சத்தில் மக்கள்
சேதமடைந்த கட்டடத்தில் ரேஷன் கடை: அச்சத்தில் மக்கள்
சேதமடைந்த கட்டடத்தில் ரேஷன் கடை: அச்சத்தில் மக்கள்
ADDED : ஆக 14, 2025 02:12 AM
கரூர் புலியூர் வெள்ளாளப்பட்டியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையால் மக்கள் அச்சமடைகின்றனர்.
புலியூர் வெள்ளாளப்பட்டியில், மேலப்பாளையம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்துக்குட்பட்ட பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. இங்கு, 523 கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். வாரத்தில் இரு நாட்கள் மட்டும் செயல்படும் இந்த கடை, சில நேரங்களில் ஊழியர்கள் அலுவல் வேலை காரணமாக முறையாக திறப்பதில்லை. மேலும், மின்னணு எடையளவு இயந்திரம், பில் போடும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் ஒருவருக்கு பொருள் வாங்க, 20 நிமிடமாகிறது. 523 கார்டுகளுக்கு மாதத்தில், 8 நாட்கள் மட்டுமே கடை செயல்படுவதால் சிலர் பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.இந்த கடையை முழு நேர கடையாக மாற்ற வேண்டும். தற்போது ரேஷன் கடை உள்ள கட்டடத்தில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. பொருட்கள் வாங்க வருவோர் மற்றும் பணியாளர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் என்பதால், அசம்பாவிதம் ஏற்படும் முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.