/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூன்று கிராமங்களில் ரேஷன் கடை திறப்பு
/
மூன்று கிராமங்களில் ரேஷன் கடை திறப்பு
ADDED : ஆக 22, 2025 01:54 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, புத்துார் பஞ்., அ.நடுப்பட்டியில், பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு கூட்டுறவு சார் பதிவாளர் தாரணி தலைமை வகித்தார். புத்துார் பஞ்.. மாஜி தலைவர் தணிகாசலம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, மாவட்ட பிரதிநிதிகள் புத்துார் ஆறுமுகம், சந்திரன், மாஜி முதலைப்பட்டி பஞ்., தலைவர் மணிகண்டன், நங்கவரம் டவுன் பஞ்., துணைத்தலைவர் அண்பழகன், ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுதி நேர ரேஷன் கடையை எம்.எல்.ஏ.,மாணிக்கம் திறந்து வைத்தார். பின், பொது மக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
இதேபோல் சேப்ளாப்பட்டி தெற்குமேடு, காவல்காரன்பட்டி ஆகிய கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, தாசில்தார் இந்துமதி, மண்டல துணை தாசில்தார் நீதிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.