/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் 2.85 லட்சம் புத்தகம் வினியோகம்
/
அரசு பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் 2.85 லட்சம் புத்தகம் வினியோகம்
அரசு பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் 2.85 லட்சம் புத்தகம் வினியோகம்
அரசு பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் 2.85 லட்சம் புத்தகம் வினியோகம்
ADDED : ஆக 08, 2025 01:16 AM
கரூர், அரசு பள்ளிகளில், மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, மூன்றா-வது கட்டமாக, 2.85 லட்சம் புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுழை, நட, ஓடு, பற என ஆழமான கருத்துக்களுடன், அழகிய படங்கள், எளிய நடையில் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த சின்ன, சின்ன புத்தகங்கள் மாணவ, மாணவிகளின் மனங்களை கொள்ளையடித்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில், 81 தலைப்புகளில் புத்தகங்கள், அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இது குறித்து, பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மொபைல் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கியுள்ள மாணவர்களை நெறிப்படுத்த, நுால் வாசிப்பு உதவும். அதனால் வாசிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்தி மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, இரண்டு கட்டங்களாக அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக, 81 தலைப்புகளில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதில், கரூர் மாவட்டத்தில், 861 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2 லட்சத்து, 85 ஆயிரத்து, 137 புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.