/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் மீது கார் மோதல்: ரியல் எஸ்டேட் அதிபர் பலி
/
டூவீலர் மீது கார் மோதல்: ரியல் எஸ்டேட் அதிபர் பலி
ADDED : மே 02, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:
வேலாயுதம்பாளையம் அருகே, டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமானந்தம், 70; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், நேற்று மதியம் டூவீலரில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தளவாப்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த சித்ரஞ்சன், 45, என்பவர் ஓட்டி சென்ற கார், டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. அதில், பரமானந்தம் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.