/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில வாலிபர் மீட்பு
/
மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில வாலிபர் மீட்பு
ADDED : அக் 10, 2024 03:29 AM
குளித்தலை: கருர் கடைவீதியில், கடந்த ஒரு வாரமாக, 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபர் ஒருவர் பாது-காப்பு இன்றி, அரைகுறை ஆடைகளுடன், போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரிவதாக புகார் வந்தது.
அவரை மீட்டு சாந்திவனம் மனநல காப்பகத்தில் அனுமதித்து, சிகிச்சையளித்து உதவிட வேண்டுமென்று, கரூர் அன்பே சிவம் அறக்கட்டளை நிறுவனர் பாக்கியராஜ், கரூர் மாவட்ட மாற்றுத்-திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜூக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையேற்று சாந்திவனம் மனநல காப்பகத்தின் இயக்குனர் அரசப்பன் உத்தரவின்படி, நேற்று ஒருங்கிணைப்-பாளர் தீனதயாளன், டிரைவர் மற்றும் கண்காணிப்பாளர் வேல்-முருகன், மனநல சமூக பணியாளர் மரிய ஜெர்சில்லா மற்றும் செவிலியர் மருதாம்பாள் ஆகியோர் கொண்ட மீட்புக் குழுவினர், சம்பவ இடத்துக்கு சென்று மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு, திருச்சி, தில்லை நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர் கனகராஜ், திறன் உதவி-யாளர் ராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.