/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வட்டார அளவிலான கலைத்திருவிழா; 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
/
வட்டார அளவிலான கலைத்திருவிழா; 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
வட்டார அளவிலான கலைத்திருவிழா; 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
வட்டார அளவிலான கலைத்திருவிழா; 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
ADDED : அக் 25, 2024 08:08 AM
கரூர்: கரூர், தான்தோன்றிமலையில் நடந்த வட்டார அளவிலான கலைத்திருவிழாவில், 300க்கும் மேற்-பட்டவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாண-வர்களுக்கு, 2022 முதல் கலைத் திருவிழா போட்-டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, கரூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அனைத்து மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடந்து வருகிறது. மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில், பள்ளி அளவிலான போட்-டிகள் முடிவடைந்தன. குறு வளவிலான போட்-டிகள் நடந்தது. இப்போட்டிகளில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் மாணவர்கள் வட்-டார அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்-டனர்.
அதன்படி, கரூர் தான்தோன்றிமலை அரசு மேல்-நிலைப் பள்ளியில், தான்தோன்றிமலை வட்டார அளவிலும், கரூர் மாநகராட்சி மேல்நிலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கரூர் வட்டார அளவிலான போட்டிகள் நேற்று நடந்தது. இதில், ஆறு தனிநபர்கள் பிரிவிலும், இரண்டு குழு பிரிவு என மொத்தம் எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்-கேற்றனர்.
வட்டார அளவிலான போட்டிகளில், முதலிடம் பெறும் மாணவர்கள் அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெறுகின்றனர்.