/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெளிமாநில தொழிலாளர் விபரம் பதிவு மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் முகாம்
/
வெளிமாநில தொழிலாளர் விபரம் பதிவு மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் முகாம்
வெளிமாநில தொழிலாளர் விபரம் பதிவு மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் முகாம்
வெளிமாநில தொழிலாளர் விபரம் பதிவு மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் முகாம்
ADDED : நவ 24, 2024 01:31 AM

வெளிமாநில தொழிலாளர் விபரம் பதிவு
மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் முகாம்
நாமக்கல், நவ. 24-
'வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள், அவர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்ய, 8 தாலுகாக்களில் சிறப்பு முகாம் நடக்கிறது' என, நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர்(அமலாக்கம்) ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், கட்டுமான நிறுவனங்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளவர்கள், அந்த தொழிலாளர்கள் குறித்த விபரங்களை, தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விபரங்களை பதிவு செய்ய, தொழிலாளர் துறை மூலம், நாமக்கல் மாவட்டத்தில், தாலுகா வாரியாக சிறப்பு முகாம் நடக்கிறது. வரும், 29ல் மோகனுார் தாலுகா அலுவலகம், டிச., 3ல், நாமக்கல் தாலுகா, டிச., 6ல் திருச்செங்கோடு தாலுகா, டிச., 10ல் ராசிபுரம் தாலுகா அலுவலகங்களில், தொழிலாளர் உதவி ஆய்வாளர் முன்னிலையில் சிறப்பு முகாம் நடக்கிறது. மேலும், டிச., 13ல் சேந்தமங்கலம் தாலுகா, 17ல், சங்ககிரி தாலுகா, டிச., 20ல், குமாரபாளையம் தாலுகா, டிச., 24ல், ப.வேலுார் தாலுகா அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள், தங்களின் மொபைல் எண், ஆதார் அட்டை, பான் கார்டு, இ--மெயில் முகவரி, முழு முகவரியுடன், தங்களிடம் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் அட்டை, மொபைல் எண் ஆகிய விபரங்களுடன், தங்கள் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் முகாமில் கலந்துகொண்டு விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.