/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
/
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
ADDED : செப் 27, 2024 07:21 AM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானாவை சுற்றி வைக்கப்பட்ட பேனர்களை, போலீசார் அகற்றினர்.
தனியார் கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள மெகா பேனர்களாலும், கட்சிக்காரர்கள் வைத்த பேனர் சரிந்து விழுந்ததாலும், அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நீதிமன்ற உத்தரவின்படி, கரூர் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் இருந்த மெகா பேனர்கள் அகற்றப்பட்டன. கடந்த சில நாட்களாக, கரூரில் மீண்டும் பஸ் ஸ்டாண்ட், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் உள்பட பல்வேறு இடங்களிலும், மிக உயரமான கட்டங்களிலும் விதிகளை மீறி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.
குறிப்பாக, கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகில், வணிக வளாகத்தில் உள்ள மொட்டை மாடியில், ராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில், இவை அகற்றப்பட்டது. இந்நிலையில் மனோகரா ரவுண்டானா உள்பட பல்வேறு ரவுண்டானா, மின் கம்பங்களில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில், பேனர்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பேனர்களை போலீசார் நேற்று அகற்றினர். வேறு எங்கேனும் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து அகற்றுவோம் என, தெரிவித்தனர்.