/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : டிச 24, 2024 02:18 AM
குளித்தலை, டிச. 24-
குளித்தலை அடுத்த, தோகைமலை வருவாய் குறுவட்டத்திற்குட்பட்ட கல்லடை கிராமத்தை சேர்ந்த சந்தானகுமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து இருந் தார். இதையடுத்து கடந்த, 19ல் நீதிமன்ற தீர்ப்புரையின்படி நேற்று காலை 11:00 மணியளவில் கிராமம் புல எண்கள் 438, 439 என வகைபடுத்தி நில அளவை செய்து அத்து காண்பிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தாசில்தார் இந்துமதி தலைமையில் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் மேற்பார்வையில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.