/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீதிமன்ற உத்தரவின்படி குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
நீதிமன்ற உத்தரவின்படி குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நீதிமன்ற உத்தரவின்படி குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நீதிமன்ற உத்தரவின்படி குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : மார் 08, 2024 07:14 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, தென்னிலை பஞ்., நல்லாச்சிப்பட்டியில் சுண்ணாம்புகாரன் குளம் உள்ளது. 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளமானது பஞ்., நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. மழை காலங்களில் வரும் மழைநீரானது, சுண்ணாம்புகாரன் குளத்தில் தேங்கி நிற்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய கிணறுகளுக்கும், ஆழ்குழாய் கிணறுகளுக்கும் நீர்மட்டத்தை உயத்துவதற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் தென் பகுதியில் ஒரு கான்கிரீட் வீடு, 3 ஓட்டு வீடு, 3 ஹாஸ்பிஸ்டாஸ் வீடுகள் என மொத்தம் 7 வீடுகள் கட்டி குடியிருந்து வந்தனர். குடியிருப்புகளால் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் குளத்திற்கு வராமல் தடுக்கப்பட்டு வந்தது. இதனால், குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குளித்தலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், நல்லாச்சிப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மகாமுனி, காத்தான் ஆகியோர் கடந்த, 2000ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவு வழங்கியது. இந்த உத்தரவை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் தெரிவித்தும், மூன்று மாதங்களுக்கு மேலாக அகற்றாமல் இருந்து வந்தனர். இதையடுத்து கடவூர் தாசில்தார் இளம்பருதி தலைமையில், குளித்தலை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற முதுநிலை கட்டளை பணியாளர் (அமீனா) சக்திவேல், தென்னிலை பஞ்., தலைவர் பழனியம்மாள், தென்னிலை வி.ஏ.ஓ., முத்துசாமி ஆகியோர் சிந்தாமணிப்பட்டி எஸ்.ஐ., கண்ணதாசன் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் நான்கு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புக்களை அகற்றி தரைமட்டமாக்கினர்.

