/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரெங்கநாதபுரம் பஞ்.,ல் புதிய வகுப்பறை திறப்பு விழா
/
ரெங்கநாதபுரம் பஞ்.,ல் புதிய வகுப்பறை திறப்பு விழா
ADDED : மார் 24, 2025 06:50 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் பஞ்சாயத்து பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கட்டங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். இதில், ரெங்கநாதபுரம் பஞ்சாயத்து, காமராஜ் பண்ணை மாரியம்மன் கோவில் அருகே, 8.75 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நாடக மேடை கட்டட திறப்பு விழா நடந்தது.தொடர்ந்து, கட்டளை பஞ்சாயத்து அரசு தொடக்கப்பள்ளியில், மூன்று புதிய வகுப்பறை கட்டடத்தை எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி திறந்து வைத்தார். ரெங்கநாதபுரம் பஞ்சாயத்தில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் ரவிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.