/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் ஸ்டாண்டில் வாடகை பாக்கி; 21 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
/
பஸ் ஸ்டாண்டில் வாடகை பாக்கி; 21 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
பஸ் ஸ்டாண்டில் வாடகை பாக்கி; 21 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
பஸ் ஸ்டாண்டில் வாடகை பாக்கி; 21 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:57 AM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்-துள்ள, 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.கரூர் மாநகராட்சியில் கமிஷனராக சரவணகுமார் இருந்த போது, கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த கவுன்சிலர் கூட்டத்தில், 352 கடைகளில், 14 கோடி ரூபாய் வாடகை நிலுவை உள்ளது.
மூன்று மாதத்திற்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளில், குத்-தகை ரத்து செய்து பொது ஏலம் விடலாம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், கமிஷனர் சரவணகுமார் திடீரென பணி மாற்றம் செய்யப்பட்டு, புதிய கமி-ஷனராக சுதா நியமனம் செய்யப்பட்டார்.அவர் பொறுப்பு ஏற்ற பின், டிச., 28ல் நடந்த கவுன்சிலர்கள் கூட்-டத்தில், 352 கடைகள் குத்தகை பாக்கியை செலுத்த மூன்று மாத (மார்ச் 31 வரை ) கால அவகாசம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்-பட்டுள்ளது. மூன்று மாதம் கடந்த நிலையில், 30 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகி இருந்தது. கடந்த வாரம் நடந்த கரூர் மாநக-ராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில், விரைவில் வசூல் செய்ய வேண்டும் என பல கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள, 64 கடைகள், 2.80 கோடி ரூபாய் நிலுவை வாடகை வைத்துள்ளனர். அந்த கடை-களில், மாநகராட்சி வருவாய் உதவி அலுவலர் சாரங்க சரவணன் தலைமையில் ஆய்வு நடத்தினர். அதில், நீண்ட நாள்களாக பாக்கி வைத்துள்ள, 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், 75 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மற்ற கடைகளுக்கு உடன-டியாக நிலுவை தொகை செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடைகளின் வெளியே ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அகற்றப்பட்டது.