/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேர்தல் பணிக்கு விலக்கு அளிக்க வேண்டுகோள்
/
தேர்தல் பணிக்கு விலக்கு அளிக்க வேண்டுகோள்
ADDED : அக் 31, 2025 01:03 AM
கரூர்,தேர்தல் பணி செய்ய முடியாத நிலையில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு,  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் கடிதம் அனுப்பி  உள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் விபரங்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், நடப்பு ஆண்டு பணி ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்கள், கர்ப்பிணிகள், கடும் நோயுற்றவர்கள், மாற்றுக் திறனாளிகள் ஆகியோருக்கு  தேர்தல் பணிகளில் இருந்து விலக்களிக்க வேண்டும். இவர்களிடம் இருந்து, தகுந்த ஆதாரங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் தேர்தல் பணிகளுக்கு பெறக்கூடிய விண்ணப்பங்கள் பெறுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். இதனை, இந்திய தேர்தல் கமிஷன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

