/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டுகோள்
/
கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டுகோள்
ADDED : ஜன 22, 2024 12:04 PM
அரவக்குறிச்சி: தென்னிலை, க.பரமத்தி செல்லும் சாலையில், கூடுதல் மின் விளக்குகள் அமைக்க, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சின்னதாராபுரத்தில் இருந்து, தென்னிலை செல்லும் சாலை, 15 கி.மீ., கொண்டதாகும். இதே போல சின்னதாராபுரத்தில் இருந்து, க.பரமத்தி செல்லும் சாலை, 17 கி.மீ., கொண்டதாகும். இரண்டு சாலைகளிலும் ஒன்றிரண்டு தெருவிளக்குகளே உள்ளதால், இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பயத்துடன் கடந்து வருகின்றனர். தெரு விளக்குகள் இல்லாமையால், இரவு நேரங்களில் இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
எனவே, இந்த சாலையில் கூடுதல் தெரு விளக்குகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.