/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் மர்ம நபர்கள் உலா இரவு ரோந்து மேற்கொள்ள கோரிக்கை
/
அரவக்குறிச்சியில் மர்ம நபர்கள் உலா இரவு ரோந்து மேற்கொள்ள கோரிக்கை
அரவக்குறிச்சியில் மர்ம நபர்கள் உலா இரவு ரோந்து மேற்கொள்ள கோரிக்கை
அரவக்குறிச்சியில் மர்ம நபர்கள் உலா இரவு ரோந்து மேற்கொள்ள கோரிக்கை
ADDED : டிச 30, 2025 05:23 AM
அரவக்குறிச்சி; அரவக்குறிச்சி அருகே, தடாகோவில் கணேஷ் நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவருக்கு சொந்தமான காரை, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் நோட்டமிட்ட மர்ம நபர்கள், காரை திருட முயன்றனர். காரில் இருந்து அபாய சத்தம் கேட்டதால், கதிர்வேல் எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது, மர்ம நபர்கள் தப்பி ஓடியது தெரியவந்தது.
இதேபோல், கடந்த வாரம், ஓந்தாம்பட்டி பகுதியில், இரவு, 11:00 மணிக்கு டூவீலரில் வந்த மர்ம நபர்களை நிறுத்தி, குடியிருப்பு வாசிகள் விபரம் கேட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த மர்ம நபர்கள், டூவீலரில் வேகமாக தப்பினர். கடந்த, 15 நாட்களுக்கு முன் பள்ளப்பட்டி பகுதியில், நள்ளிரவு, 12:30 மணிக்கு, 'டார்ச் லைட்' அடித்தபடியே டூவீலரில் மர்ம நபர்கள் உலாவியது, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது. அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் உலா வருவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதனால், போலீசார் இரவு ரோந்து மேற்கொள்ள வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.