/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈசநத்தம் சந்தை வளாகத்தை மறு சீரமைப்பு செய்ய கோரிக்கை
/
ஈசநத்தம் சந்தை வளாகத்தை மறு சீரமைப்பு செய்ய கோரிக்கை
ஈசநத்தம் சந்தை வளாகத்தை மறு சீரமைப்பு செய்ய கோரிக்கை
ஈசநத்தம் சந்தை வளாகத்தை மறு சீரமைப்பு செய்ய கோரிக்கை
ADDED : அக் 12, 2024 01:12 AM
ஈசநத்தம் சந்தை வளாகத்தை
மறு சீரமைப்பு செய்ய கோரிக்கை
அரவக்குறிச்சி, அக். 12-
அடிப்படை வசதி இல்லாத, ஈசநத்தம் சந்தை வளாகத்தை மறு சீரமைப்பு செய்ய விவசாயிகள் மற்றும் சந்தை வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி அடுத்த ஈசநத்தத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை கூடுகிறது. இங்கு கடைகள் போட, 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, ஏராளமானோர் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் சந்தை வளாகத்தில் இடப்பற்றாக்குறை, குடிநீர், மின்சாரம், கடை அமைக்கும் மேடை, கழிவறை என, எந்த அடிப்படை வசதியும் இல்லாமல், மக்கள், வியாபாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, சந்தைக்கு இடம் ஒதுக்கியோ அல்லது தற் போது செயல்பட்டு வரும் கடையை விரிவாக்கம் செய்யவோ, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள் ளனர்.