வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
ADDED : நவ 18, 2026 07:10 AM
கரூர்:வீடுகளில்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி, நிலத்தடி
நீர்மட்டத்தை உயர்த்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என,
கலெக்டர் பிரசன்னா ராமசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர்
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு
மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலை மேம்படுத்திடும் வகையில், மழைநீர்
சேகரிப்பு வசதி இல்லாத வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு, வணிக
நிறுவனங்கள், தொழிற்சாலை, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் உரிய
தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, புதிய மழைநீர் சேகரிப்பு
கட்டமைப்புகளை ஏற்படுத்தியும் அல்லது ஏற்கனவே உள்ள
கட்டமைப்புகளை புனரமைத்து மக்கள் இயக்கமாக முன்னெடுக்க
பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சமூக பொறுப்பு
மழைநீர்
சேகரிப்பு என்பது அரசு துறைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய பணியல்ல.
ஒவ்வொரு தனிநபரும் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டிய சமூக
பொறுப்பாகும். பொது மக்கள் தங்களுடைய வீடுகளின் மேற்கூரைகளில்
விழும் மழை நீரை, முறையாக சேகரித்து, வடிகட்டும் அமைப்பு மூலம்,
நிலத்தடியில் செறிவூட்டும் வகையில் புதிய மழைநீர் சேகரிப்பு
கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
புனரமைத்தல் பணி
மாநகராட்சி,
நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் கிராம உள்ளாட்சி அமைப்பு வாயிலாக
ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து கணக்கெடுப்பு
மேற்கொண்டு, அவற்றின் செயல்பாடு நிலை குறித்து ஆய்வு செய்து, பழுதடைந்த
கட்டமைப்புகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள்
உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குளங்கள், ஊரணி, குட்டை,
தடுப்பணை மற்றும் இதர நீர்நிலைகளில் மழை நீரை சேகரிக்கும் திறனை
மேம்படுத்தும் வகையில், உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி
துார்வாருதல், சீரமைத்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு
பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறியுள்ளார்.
