/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட் குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை
/
அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட் குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை
அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட் குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை
அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட் குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 26, 2025 04:18 AM
கரூர்: கரூர் அருகே, வீரராக்கியத்தில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்-படுவதால், குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், புலியூர் அருகில் வீரராக்கியத்தில், கரூர்--தி-ருச்சி வழித்தடத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை கடந்துதான் கரூர் - திருச்சி சாலையில் உள்ள புலியூர், வீரராக்-கியம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வீரராக்கியத்தின் மறுபகு-தியில் உள்ள சின்னம்மநாயக்கன்பட்டி, நடராஜபுரம், நத்தமேடு, கட்டளை, மேல கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனுாார், மாயனுார் போன்ற பகுதிகளுக்கும், சின்னம்மநாயக்கன்பட்டி கிரா-மத்துக்கும் சென்று வருகின்றனர்.சின்னம்மநாயக்கன்பட்டி, நடராஜபுரம், கட்டளை, ரெங்கநாத-புரம் ஆகிய இடங்கள் காவிரியின் கரையோரம் என்பதால், வேளாண்மை நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதிகளில் நெல், கோரை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல், கோரைகளை வீரராக்-கியம் ரயில்வே கேட்டை கடந்துதான் விவசாயிகள் எடுத்து செல்-கின்றனர். பள்ளி, கல்லுாரிகளுக்கும் ரயில்வே கேட் வழியாக சென்றாக வேண்டும்.
ஈரோடு, கோவை, கரூர் பகுதியில் இருந்து நாகர்கோவில், திருச்சி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்-படுகின்றன. இந்த ரயில்கள் செல்லும் போது, வீரராக்கியம் ரயில்வே கேட் மூடப்படுகிறது. அடிக்கடி கேட் மூடப்படுவதால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிப்படுகின்றனர்.
அவசர தேவைக்கு செல்லும், ஆம்புலன்ஸ்கள் கூட கேட் மூடப்படும் சமயத்தில், மாட்டி கொள்கிறது. இப்பகுதியில் குகை வழிப்பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்-துள்ளனர்.