/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆராஅமுதீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
/
ஆராஅமுதீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
ஆராஅமுதீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
ஆராஅமுதீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : பிப் 16, 2025 03:41 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் கிராமத்தில், 1,400 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த உடையநாதர் என்ற ஆராஅமுதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்-கோவிலை புனரமைக்க வேண்டும் என, கடந்த, 20 ஆண்டுக-ளுக்கும் மேலாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற கோவில் நிர்வாகம், மேல் கோபு-ரத்தை அகற்றிவிட்டு, அதேபோல் சிற்பங்களுடன் கூடிய புதிய கோபுரம் அமைக்க திட்ட அறிக்கை தயாரித்து, ஹிந்து சமய அற-நிலையத்துறை ஆணையர், அமைச்சர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதை பரிசீலனை செய்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து நிதி ஒதுக்கிய பின் பணிகள் தொடர உள்ளன.இந்த பழமையான சிவாலயத்தை புனரமைக்க முன்வந்த கோவில் நிர்வாகம், புரவலர்களுக்கு, மேட்டுமருதுார் கிராம மக்கள் மற்றும் சிவனடியார்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர். மேலும், இந்த புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.