/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெயிலால் 'டெண்டர்' வேலை தாமதம் நாட்களை நீட்டித்து தருமாறு கோரிக்கை
/
வெயிலால் 'டெண்டர்' வேலை தாமதம் நாட்களை நீட்டித்து தருமாறு கோரிக்கை
வெயிலால் 'டெண்டர்' வேலை தாமதம் நாட்களை நீட்டித்து தருமாறு கோரிக்கை
வெயிலால் 'டெண்டர்' வேலை தாமதம் நாட்களை நீட்டித்து தருமாறு கோரிக்கை
ADDED : மே 04, 2024 07:09 AM
ப.வேலுார் : ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், 'டெண்டர்' வேலைகள் கால தாமதத்திற்கு சுட்டெரிக்கும் வெயிலே காரணமாக இருப்பதால், நாட்களை நீட்டித்து தருமாறு கான்ட்ராக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், 18 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலுமே சாலை, சாக்கடை வசதி ஏற்படுத்த மன்ற கூட்டம் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. அந்த டெண்டர் எடுத்த, ஒப்பந்ததாரர்கள் செல்லப்பன், விஜி ஆகியோர், நேற்று டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது, 'டெண்டர்' பணிகள் காலதாமதம் ஆவதற்கு காரணம், கோடை வெயில் சுட்டெரிப்பதால், கூலி தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் திணறுகின்றனர். ப.வேலுார் பகுதிகளில், 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. பகல் நேரத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் உடல் சோர்வால் மயக்கமடைகின்றனர்.
அதனால், காலை, 8:00 முதல், 10:00 மணி வரையும், மீண்டும் மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை மட்டுமே வேலை செய்ய முடிகிறது. அதனால் ஒப்பந்த பணிகள் முடிக்க கால தாமதம் ஏற்படுகிறது. கூலி தொழிலாளர்களின் உடல்நலம் கருதி, ஒப்பந்த பணிகளை முடிக்க கால நேரத்தை அதிகப்படுத்தி தருமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.