/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அண்ணா திருமண மண்டபத்திற்கு ஜெனரேட்டர் அமைக்க கோரிக்கை
/
அண்ணா திருமண மண்டபத்திற்கு ஜெனரேட்டர் அமைக்க கோரிக்கை
அண்ணா திருமண மண்டபத்திற்கு ஜெனரேட்டர் அமைக்க கோரிக்கை
அண்ணா திருமண மண்டபத்திற்கு ஜெனரேட்டர் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 09, 2026 06:34 AM
குளித்தலை; ளித்தலை, காவேரி நகரில் அண்ணா திருமண மண்டபம், கடந்த, 1973ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த மண்டபம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரு-கிறது. அனைத்து வசதிகளும் அடங்கிய திருமண மண்டபம், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்களது இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் நடத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டது.
இந்த மண்டபத்தில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் கட்சி கூட்டங்கள், தொண்டு நிறுவனங்-களின் கூட்டங்கள் என, பல வகைகளில் அண்ணா திருமண மண்டபம் பயன்பாட்டில் இருந்து வருகி-றது. நிகழ்ச்சி நடக்கும்போது மின்சாரம் இல்லாத நேரங்களில் மண்டபத்தை பயன்படுத்த முடியாத வகையில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வரு-கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி மாவட்டம் நிர்வாகம், ஜெனரேட்டர் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

