/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை நகராட்சி 2வது வார்டில் தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
/
குளித்தலை நகராட்சி 2வது வார்டில் தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
குளித்தலை நகராட்சி 2வது வார்டில் தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
குளித்தலை நகராட்சி 2வது வார்டில் தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : செப் 26, 2024 02:05 AM
குளித்தலை: குளித்தலை நகராட்சி, 2வது வார்டு சங்கிலிராயன் தெரு, மேற்கு பகுதியில் மின் கம்பம் உள்ளது. ஆனால், தெருவிளக்குகள் இல்லை. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மண் கரை மற்றும் விவசாய நிலங்கள் இருப்பதால், இரவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, வார்டு கவுன்சிலர் சந்துரு நேர-டியாகவும், கூட்டத்தொடரிலும் மின் விளக்கு அமைக்க கோரிக்கை விடுத்தார். ஆனால், நகராட்சி நிர்வாகம் தெருவிளக்கு அமைக்க
முன்வராமல் காலம் தாழ்த்தி வருகிறது. மேலும், அப்ப-குதி மக்கள், நகராட்சி கமிஷனர் நந்தகுமாரிடம், தெருவிளக்கு அமைக்க வேண்டும் என, கோரிக்கை மனு அளித்தனர்.நகராட்சி கமிஷனர் நந்தகுமார் கூறுகையில், ''புதிய மின் விளக்-குகள் வாங்க, மின் வாரியத்திற்கு உரிய தொகை செலுத்தப்பட்-டுள்ளது. விரைவில் புதிய மின் விளக்குகள் அமைக்கப்படும்,'' என்றார்.