/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் க.பரமத்தியில் திறக்க கோரிக்கை
/
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் க.பரமத்தியில் திறக்க கோரிக்கை
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் க.பரமத்தியில் திறக்க கோரிக்கை
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் க.பரமத்தியில் திறக்க கோரிக்கை
ADDED : மே 23, 2024 06:47 AM
கரூர் : தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த க.பரமத்தியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி உள்ளது. இதன் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து வெள்ளகோவில் வரை, 40 கி.மீ., துாரம், 2 சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் மட்டுமே செயல்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு என தனி போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. இதனால் சட்டம், ஒழுங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏற்கனவே போலீசார் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடுவது கூடுதல் சுமையாக உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி செல்வோரை கண்காணிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனவே, க.பரமத்தியை தலைமையகமாக கொண்டு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

