sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி - ஒத்தமாந்துறைக்கு அரசு பஸ் இயக்க வேண்டுகோள்

/

அரவக்குறிச்சி - ஒத்தமாந்துறைக்கு அரசு பஸ் இயக்க வேண்டுகோள்

அரவக்குறிச்சி - ஒத்தமாந்துறைக்கு அரசு பஸ் இயக்க வேண்டுகோள்

அரவக்குறிச்சி - ஒத்தமாந்துறைக்கு அரசு பஸ் இயக்க வேண்டுகோள்


ADDED : ஜூன் 09, 2025 03:41 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் இருந்து ஒத்தமாந்துறை வழியாக தென்னிலை வரை அரசு பஸ் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்-டுகோள் விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து கரூர் மூலனுார், கன்னிவாடி, தாராபுரம், ஈசநத்தம், கோவிலுார் என பல்வேறு ஊர்களுக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரவக்குறிச்சியில் இருந்து ஒத்தமாந்துறை வழியாக தென்னிலைக்கு டவுன் பஸ் வசதி இல்லை. அரவக்குறிச்சி, ஊத்துார், பாலமேடு, தண்ணீர் பந்தல், அரிக்காரன்வலசு, கல்லம-டைபுதுார் பிரிவு, பள்ளப்பட்டி பிரிவு, ஒத்தமாந்துறை, சின்னதா-ராபுரம், தென்னிலை வழித்தடத்தில் இதுவரையிலும் டவுன் பஸ் இயக்கப்

படவில்லை.

இதேபோல், தென்னிலையிலிருந்து, அரவக்குறிச்சி, பள்ளப்பட்-டிக்கு மறு வழித்தடத்தில் எவ்வித டவுன் பஸ்சும் இயக்கப்பட-வில்லை. இந்த வழித்தடத்தில், மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு கிராமம் வீதம், 30 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த வழித்த-டங்களில் தினசரி வேலைக்கு செல்லும் பெயின்டர்கள், கொத்-தனார் உள்ளிட்ட கூலி வேலை பார்ப்பவர்கள் மாணவ, மாண-வியர், மத்திய, மாநில அரசு பணிகளுக்கு செல்பவர்கள் என ஏரா-ளமானோர் டவுன் பஸ் வசதி இல்லாத காரணத்தால் பாதிக்கப்ப-டுகின்றனர்.

மேலும், தென்னிலை, சின்னதாராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பல்வேறு வேலை காரணமாக அரவக்குறிச்சி வட்-டாட்சியர் அலுவலகம் வரவேண்டிய அவசிய தேவையின்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதேபோல், தாராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட மேற்கு மாவட்ட ஊர்களில் இருந்து அர-வக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட இந்த வழித்தடத்தில் உள்ள ஊர்களுக்கு வருபவர்கள் சின்னதாராபுரம் சென்று ராஜபுரம் வழி-யாக, 15 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு வர வேண்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கினால் பள்ளப்பட்டி பிரி-விலிருந்து அரவக்குறிச்சிக்கு சுற்றி வராமல் நேர் வழியாக வந்து-விட முடியும். அரவக்

குறிச்சி, ஊத்துார், பாலமேடு, தண்ணீர் பந்தல், அரிக்காரன்வலசு, கள்ளமடைபுதுார் பிரிவு, பள்ளப்பட்டி பிரிவு, ஒத்தமாந்துறை வழியாக இரு மார்க்கத்திலும் டவுன் பஸ் வசதி செய்வதன் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயனடைவர்.

எனவே, இதன் காரணமாக தாலுகா தலைமையிடமான அரவக்கு-றிச்சியில் இருந்து பள்ளப்பட்டி பிரிவு ஒத்தமாந்துறை வழியாக தென்னிலை வரை டவுன் பஸ் இயக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us