/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேல்நிலை தொட்டியை அகற்ற வேண்டுகோள்
/
மேல்நிலை தொட்டியை அகற்ற வேண்டுகோள்
ADDED : மே 08, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,கரூர்- - திருச்சி சாலை மூலக்காட்டனுார் பிரிவில் உள்ள, சேதமடைந்த மேல்நிலை தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருர் - திருச்சி சாலையில் காந்திகிராமம் அருகில், மூலக்காட்டனுார் பிரிவு சாலையோரம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி உள்ளது. தற்போது, அந்த தொட்டியால் எந்தவித பயனும் இல்லை. சாலையோரம் பாதுகாப்பற்ற நிலையில் தொட்டி உள்ளது. தொட்டியின் பாகங்கள் அனைத்தும் சிதிலமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
பல ஆண்டுகளாக இடியும் நிலையில் உள்ள, தொட்டியை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

