/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொடிங்கால் வடிகால் கரையில் முற்செடிகள் அகற்றிட கோரிக்கை
/
கொடிங்கால் வடிகால் கரையில் முற்செடிகள் அகற்றிட கோரிக்கை
கொடிங்கால் வடிகால் கரையில் முற்செடிகள் அகற்றிட கோரிக்கை
கொடிங்கால் வடிகால் கரையில் முற்செடிகள் அகற்றிட கோரிக்கை
ADDED : ஜூன் 21, 2024 07:05 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., பரளி கொடிங்கால் வடிகால் வாய்க்கால் நடுக்கரையில், மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் சாலைக்கு வரும் கரையின் இருபுறங்களில் முற்செடிகள் வளர்ந்துள்ளது.
தற்போது, மருதுார் ரயில்வே கேட் குகை வழிப்பாதை பணி நடைபெறுவதால், இச்சாலையில் வாகனங்கள் செல்ல மூன்று மாதங்களுக்கு ரயில்வே நிர்வாகம் தடை செய்துள்ளது. மேட்டுமருதுார், பணிக்கம்பட்டி, குப்புரெட்டியப்பட்டி, வலையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் பொது மக்கள், குளித்தலை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து வருவோர், கொடிங்கால் வடிகால் வாய்க்கால் கரையில் உள்ள தார்ச்சாலையில் செல்ல வேண்டும். பொது மக்கள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் வடிகால் வாய்க்கால் கரையின், இருபுறங்களிலும் உள்ள முற்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.