ADDED : பிப் 28, 2024 07:48 AM
குளித்தலை : குளித்தலை பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை வழியாக, திருச்சி மார்க்கத்தில் இருந்து நகர கடைவீதி, பஸ் ஸ்டாண்டுக்கு வரும் அனைத்து பஸ்கள், கரூர், மணப்பாறை, திண்டுக்கல், பஞ்சப்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து, பஸ் ஸ்டாண்டுக்கு வரும் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் நகர கடைவீதிக்கு செல்லும் கார், பைக், சைக்கிள்கள் அனைத்தும் காந்தி சிலை முன் செல்ல வேண்டும். இந்த இரண்டு இடத்திலும் நகராட்சி சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த, 3 மாதங்களுக்கு முன் சேதமான தார்ச்சாலை சீரமைக்கப்பட்டது.
அப்போது, இரண்டு வேகத்தடையும் அகற்றப்பட்டது. இதனால், திருச்சி, கரூர் மார்க்கத்தில் இருந்து வந்து செல்லும் பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் போது, அதிவேகமாக இயக்கப்படுவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்தை தடுக்க, நகராட்சி நிர்வாகம் சார்பில் காந்திசிலை முன் இரண்டு இடத்தில் வேகத்தடை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

