/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்
/
பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்
ADDED : மே 12, 2025 03:26 AM
அரவக்குறிச்சி: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, தகரக்கொட்டகையில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தகரக்கொட்டகை கிராமம் அமைந்துள்ளது. மலைக்கோவிலுாருக்கு அடுத்து அமைந்துள்ள இக்கிராமத்தை சுற்றி நாகம்பள்ளி, கேத்தம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. சுற்றியுள்ள கிராம மக்கள் கரூர் அல்லது அரவக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால், தகர கொட்டகை வந்து செல்ல வேண்டும்.
இப்பகுதியில் பயணியர் நிழற்கூடம் இல்லாததால், பொதுமக்கள் வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ மாணவியர் பஸ்சுக்காக சாலையின் பக்கவாட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தகரக்கொட்டகையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.