/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்னிலையில் தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை
/
தென்னிலையில் தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை
ADDED : மே 03, 2024 07:16 AM
அரவக்குறிச்சி : கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, தென்னிலை கடைவீதி 4 சாலையில், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.தென்னிலை மற்றும் சுற்றுவட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களிலிருந்து கூலித் தொழிலாளர்கள் உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகள் என பல்வேறு தரப்பினர் பணி நிமித்தமாக தென்னிலை நான்கு வழி சந்திப்பில் வந்து செல்கின்றனர்.
மேலும் அரசு, தனியார் பஸ்கள் சந்திக்கும் இடமாக நான்கு சாலை அமைந்துள்ளது. எப்போதும் இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது.போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசாரால், தென்னிலை கடைவீதியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. இருப்பினும் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். இதனால் எதிர்ப்புறமாக வரக்கூடிய வாகனங்கள் ஒழுங்குபடுத்தி செல்ல முடியும், எனவே தென்னிலை கடைவீதியில் நான்கு வழி சந்திப்பில், தானியங்கி சிக்னல் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.