/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி கடைவீதி நான்கு சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை
/
க.பரமத்தி கடைவீதி நான்கு சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை
க.பரமத்தி கடைவீதி நான்கு சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை
க.பரமத்தி கடைவீதி நான்கு சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 17, 2024 11:30 AM
கரூர்; க.பரமத்தி கடைவீதியில் நான்கு சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதி அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேஷன், வாரச்சந்தை, அஞ்சலகம், பஞ்., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், ஆர்.ஐ., அலுவலகம், மளிகை கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள், உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் பல்வேறு பணி நிமித்தமாக, க.பரமத்தி நான்கு வழி சந்திப்புக்கு வருகின்றனர்.
மேலும், ஆரியூர் மற்றும் சின்ன தாராபுரம் பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளும், நொய்யல் வழியிலிருந்து க.பரமத்திக்கு வரும் வாகன ஓட்டிகளும், கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான ஜல்லி மற்றும் மணல் லாரி, அரசு மற்றும் தனியார் பஸ் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று திரும்புகின்றன. இதனால்
எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம். அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, போக்குவரத்தை ஒழுங்கு
படுத்த, க.பரமத்தி கடைவீதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

