/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விசைத்தறி ஓனர் வீட்டில் நகை திருடியவருக்கு 'காப்பு'
/
விசைத்தறி ஓனர் வீட்டில் நகை திருடியவருக்கு 'காப்பு'
விசைத்தறி ஓனர் வீட்டில் நகை திருடியவருக்கு 'காப்பு'
விசைத்தறி ஓனர் வீட்டில் நகை திருடியவருக்கு 'காப்பு'
ADDED : அக் 01, 2025 01:46 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளைம் ஆர்.எஸ்., சாலையின் கார்னர் பகுதியில் வசிப்பவர் முருகன், 33; விசைத்தறி உரிமையாளர். கடந்த, 28ல் இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர், ஐந்து பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றார்.
இதுகுறித்து முருகன் அளித்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, இரவில் வாலிபர் ஒருவர் அப்பகுதியில் சுற்றுத்திரிவது தெரியவந்தது.
விசாரணையில், ஈரோடு, சங்கு நகரை சேர்ந்த அக்பர்செரீப், 39, என்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிப்பாளையம் போலீசார், நேற்று மாலை ஈரோடு சென்று அக்பர்செரீபை கைது செய்து, ஐந்து பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.