/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.17.87 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்
/
ரூ.17.87 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்
ADDED : அக் 01, 2025 01:47 AM
கரூர், சாலைபுதுார் ஒழுங்கு
முறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 17 லட்சத்து, 87 ஆயிரத்து, 857 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கரூர் மாவட்டம் நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 13,684 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 59 ரூபாய், அதிகபட்சமாக, 70.99 ரூபாய், சராசரியாக, 67.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 5,038 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 390 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 216.99 ரூபாய், அதிகபட்சமாக, 221.09 ரூபாய், சராசரியாக, 220.99 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 166.49 ரூபாய், அதிக
பட்சமாக, 219.49 ரூபாய், சராசரியாக, 203.49 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 6,880 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 14 லட்சத்து, 53 ஆயிரத்து, 467 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 17 லட்சத்து, 87 ஆயிரத்து, 857 ரூபாய்க்கு
விற்பனை நடைபெற்றது.