/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'வடகிழக்கு பருவ மழையில் பயிர் சேதம் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளணும்'
/
'வடகிழக்கு பருவ மழையில் பயிர் சேதம் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளணும்'
'வடகிழக்கு பருவ மழையில் பயிர் சேதம் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளணும்'
'வடகிழக்கு பருவ மழையில் பயிர் சேதம் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளணும்'
ADDED : அக் 01, 2025 01:47 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டதோட்டக்கலை பயிர் செய்திருக்கும் விவசாயிகள், வடகிழக்கு பருவ மழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
பல்லாண்டு பயிர்களான மா, பலா, கொய்யா, தென்னை, பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில், கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அனைத்து தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும். இளம் செடிகள் காற்றால் பாதிக்காத வகையில், தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின், உடனடியாக வேர் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.
ஆண்டு பயிரான வாழையில், காற்றால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், மரத்தின் அடியில் மண் அணைத்தல் மற்றும் சவுக்கு அல்லது யூகலிப்டஸ் அல்லது மூங்கில் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். வாழை, மரவள்ளி, வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வகையில், உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.
விவசாயிகள் வெள்ளத்தின்போது தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஓடைகளை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைப்பிடித்து, பயிர்கள் சேதம் அடையாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.