/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல்
/
நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல்
நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல்
நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல்
ADDED : அக் 01, 2025 01:47 AM
குளித்தலை, கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, குளித்தலையில் வணிகர் சங்கங்கள் சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவித்தனர்.
குளித்தலை பஸ் ஸ்டாண்டு காந்தி சிலை முன்பு கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் அரசியல் பரப்புரை நிகழ்ச்சியின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குளித்தலை காந்தி சிலை முன்புறம், குளித்தலை அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் ராஜகோபால் தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது.
செயலாளர் சதக்கத்துல்லா, பொருளாளர் வினோத், வழிகாட்டு குழு தலைவர்கள் பாலசுப்பிரமணி, எட்வின், இளைஞர் அணி பொறுப்பாளர் அருள்வேல் ஆகியோர் முன்னிலையில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மவுன அஞ்சலியும், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.