ADDED : அக் 01, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. இன்று, ஆயுதபூஜை விடுமுறை, நாளை காந்தி ஜெயந்தி விடுமுறை. தொடர்ந்து இரண்டு நாட்கள் அரசு விடுமுறை என்பதால், நேற்று நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
ஏலம் நடத்தப்பட்டாலும் தொடர்ந்து விடுமுறை இருப்பதால், விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதிலும், மஞ்சளை விவசாயிகளுக்கு அனுப்புவதிலும் காலதாமதம் ஏற்படும் என்பதால் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வழக்கம் போல் செயல்படும் என, ஆர்.சி.எம்.எஸ்., அதிகாரிகள் தெரிவித்தனர்.