/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு 3 பஞ்., கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
/
கரூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு 3 பஞ்., கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
கரூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு 3 பஞ்., கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
கரூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு 3 பஞ்., கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
ADDED : அக் 03, 2024 07:26 AM
கரூர்: கரூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரி-வித்து, மூன்று பஞ்., கிராம சபை கூட்டத்தில் தீர்-மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
கடந்த, 1988-ல் சிறப்பு நிலை நகராட்சியாக கரூர் தரம் உயர்த்தப்பட்டது. 2011-ல் கரூர் நகராட்சி-யுடன் இனாம்கரூர், தான்தோன்றிமலை நகராட்-சிகள், சணப்பிரட்டி பஞ்., ஆகியவை இணைக்கப்-பட்டன. கரூர் நகராட்சியில் இருந்த வார்டுகளின் எண்ணிக்கை, 36-லிருந்து, 48 ஆக உயர்ந்தது.
கடந்த, 2021ல் கரூர் நகராட்சியை, மாநகராட்சி-யாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. தற்போது, மாநகராட்சியை ஒட்டியுள்ள பஞ்.,களை இணைத்து கரூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்-யப்படுவதற்கு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்-டுள்ளது. அதன்படி, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்., 10.30 ச.கி.மீட்டர் பரப்பளவுடன், 6,038 மக்கள் தொகையும், ஆண்டாங்கோவில் கிழக்கில், 11.28 ச.கி.மீட்டரில், 19 ஆயிரத்து, 779 மக்கள் தொகையும், காதப்பாறையில், 8.38 ச.கி.மீட்-டரில், 9,574 மக்கள் தொகையும், பஞ்சமாதேவி, 17.90 ச.கி.மீட்டரில், 9,031 மக்கள் தொகையும், ஆத்துாரில், 21.90 ச.கி.மீட்டரில், 4,701, கருப்பம்-பாளையம் பஞ்சாயத்திற்குப்பட்ட, திருமாநி-லையூர், 2.54 ச.கி.மீட்டரில், 290 மக்கள் தொகை என மொத்தம், 72.30 ச.கி.மீட்டர் பரப்பளவுடன், 49, ஆயிரத்து 383 மக்கள் தொகையுடன் விரிவாக்கம் செய்யப்படும்.
இந்நிலையில், காந்திஜெயந்தியை முன்னிட்டு ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்லை சிவா, காதப்பாறை பஞ்., தலைவர் கிருபாவதி, பஞ்சமாதேவி பஞ்., தலைவர் சாந்தி ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், கரூர் மாநகராட்சியுடன், தங்கள் பஞ்சாயத்துகளை இணைக்கக் கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கிராம பஞ்.,ல் தற்போது, 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எங்கு வேலை கிடைக்காவிட்டாலும், அரசு குறைந்தபட்சம் ஆண்டுக்கு நுாறு நாள் வேலை தருகிறது. தொகுப்பு வீடு, இலவச வீட்டு மனை-பட்டா, உறிஞ்சு குழி, தனி நபர் கழிப்பறை கிடைப்பது எளிதாக உள்ளது. அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராம பஞ்.,களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால், மாநகராட்சி இணைப்பை கைவிட வேண்டும் என, பொது-மக்கள் தெரிவித்தனர்.

