/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுார்-உமையாள்புரம் இடையே கதவணை விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
/
மருதுார்-உமையாள்புரம் இடையே கதவணை விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மருதுார்-உமையாள்புரம் இடையே கதவணை விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மருதுார்-உமையாள்புரம் இடையே கதவணை விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஆக 06, 2025 01:20 AM
குளித்தலை, மருதுார்-உமையாள்புரம் இடையே, கதவணை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குளித்தலையில் நடந்த அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குளித்தலையில், நேற்று முன்தினம் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. காவிரி படுகை விவசாய கூட்டமைப்பின் தலைவர் ஜெயராமன், குளித்தலை நகர மக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் கிராமியம் நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். தீவிர விவசாயி ராஜாராம், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயமூர்த்தி, மாவட்ட செயலாளர் மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், மணவாசி முதல் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் வரை, ஆரம்ப கட்டத்தில் உள்ள தேசிய பசுமை வழி ஆறு வழிச்சாலையை விரைந்து அமைத்திட வேண்டும்.
விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான தி.மு.க., அரசு அறிவித்த திட்டமான, குளித்தலை அருகே மருதுார்-உமையாள்புரம் இடையே, காவிரி ஆற்றின் குறுக்கே இருவழிச் சாலை வசதி உடன் கூடிய கதவணை திட்டத்தை அமைக்க வேண்டும். காவிரி ஆற்றில் வெள்ள உபரி காலங்களில் வரும் நீரை, குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெரிய ஏரிகளில் பம்பிங் மூலம் கொண்டு நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், தமிழ்நாடு அரசு ஓய்வூதியம் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

