/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓய்வு பெறும் தொழிலாளர் பண பலன்; உடனடியாக வழங்க கோரி தீர்மானம்
/
ஓய்வு பெறும் தொழிலாளர் பண பலன்; உடனடியாக வழங்க கோரி தீர்மானம்
ஓய்வு பெறும் தொழிலாளர் பண பலன்; உடனடியாக வழங்க கோரி தீர்மானம்
ஓய்வு பெறும் தொழிலாளர் பண பலன்; உடனடியாக வழங்க கோரி தீர்மானம்
ADDED : பிப் 21, 2025 07:33 AM
கரூர்: ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பண பலன்கள், ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என, ஏ.ஐ.டி.யு.சி., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கரூரில், இ.கம்யூனிஸ்ட் - ஏ.ஐ.டி.யு.சி., தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தம் மற்றும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். தேவையான பணியிடங்களுக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பண பலன்கள், ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். இறந்து போன தொழிலாளர் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில், உடனடியாக பணி வழங்க வேண்டும். பஸ் பணியில் பாரபட்சமற்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும். கூடுதல் நேரம் பணிபுரியும் போது, கி.மீட்டருக்கு, 2.50 ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, டி.ஏ., முழுமையாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில துணை பொதுச்செயலாளர் முருகராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் விஜய குமார், பொருளாளர் சக்திவேல், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் நாட்ராயன், மாவட்ட துணை செயலாளர் மோகன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.