/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ.,வில் பொறுப்பு போற்றுதலுக்குரியது: நாகராஜ் பேச்சு
/
பா.ஜ.,வில் பொறுப்பு போற்றுதலுக்குரியது: நாகராஜ் பேச்சு
பா.ஜ.,வில் பொறுப்பு போற்றுதலுக்குரியது: நாகராஜ் பேச்சு
பா.ஜ.,வில் பொறுப்பு போற்றுதலுக்குரியது: நாகராஜ் பேச்சு
ADDED : டிச 05, 2024 01:35 PM

கரூர்: கரூரில் நடைபெற்ற மாவட்ட அமைப்புத்தேர்தல் பயிற்சி முகாமில் பா.ஜ.க., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் பேசியதாவது: 12 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கட்சி. 25 பேரை கட்சியில் சேர்த்த தீவிர உறுப்பினர்கள் ஒன்று கூடி சரியான மண்டல தலைவர்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
திராவிடக்கட்சிகள் போல் அல்லாமல் தேசத்தின் மீது அக்கறை கொண்ட தேசபக்தர்களான நீங்கள் ஒருமித்த கருத்தோடு உங்களை விட தேசப்பணிக்கு நேரம் ஒதுக்கக்கூடியவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
தி.மு.க.,வில் கிடைக்கும் பதவி ஒரு சில குடும்பங்களின் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுகிறது.ஆனால் பா.ஜ.,வில் ஒருவருக்கு கிடைக்கும் பதவி இந்த தேசத்தின் நன்மைக்காக,வளர்ச்சிக்காக பயன்படுகிறது.
நாட்டிலுள்ள அனைத்துக்குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று பா.ஜ.,வில் பணியாற்றுகின்றோம் என்பதை மறந்துவிடக்கூடாது.பா.ஜ.,வில் உறுப்பினராக இருப்பது மரியாதைக்குரியது. பதவியிலிருப்பது போற்றுதலுக்குரியது.திராவிடக்கட்சிகளை வீழ்த்த கிளைக்கமிட்டியை வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன்,தேர்தல் பொறுப்பாளர் சேதுராமன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.