/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பகவதி அம்மன் கோவில் இடம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மனு

ADDED : ஜன 21, 2025 06:51 AM
கரூர்: -ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட, கரூர் கருப்பாயி கோவில் தெருவில் உள்ள, பகவதி அம்மன் கோவில் இடத்தை மீட்க வேண்டும் என, கரூர் பாலம்மாள்புரம் சங்கரன்பிள்ளை காலனியை சேர்ந்த, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., செங்குட்டுவன்
தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர், பாலம்மாள்புரம் அருகில் கருப்-பாயி கோவில் தெருவில், பகவதி அம்மன் கோவில் உள்ளது. இது, ஹிந்துசமய அறநிலையத்துறை மேற்பார்வையில் தனியார் பராமரிப்பில் உள்ளது. இதற்கு சொந்தமான, 1.63 ஏக்கர் இடம், கோவில் சுற்றி உள்ளது. இந்த இடத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பலர் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு உள்ளனர். இதனை
கோவில் இடம் என்பதை மறைத்து கட்டடம் கட்டி உள்ளனர். இது குறித்து பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடி-யாக கோவிலை சுற்றியுள்ள இடத்தில், சர்வே பணிகளை மேற்-கொள்ள
வேண்டும். அதன்பின், ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோவிலுக்கு சொந்தமான வேறு நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்-பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்-டுள்ளது.