/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பாதிப்பு
/
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பாதிப்பு
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பாதிப்பு
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பாதிப்பு
ADDED : செப் 26, 2025 01:44 AM
கரூர், வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணிகள் பாதிக்கப்பட்டன.
தமிழகம் முழுதும் நடந்து வரும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமால், வருவாய்த்துறை அலுவலர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். திட்டம் துவக்கப்பட்ட நாள் முதல், மாவட்ட நிர்வாகத்தினர், வருவாய் துறையினரை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றனர். வாரத்தில் ஆறு நாட்கள் முகாம் பணியில் ஈடுபட வேண்டி உள்ளது.
முகாமில் பெறப்படும் மனுக்களை, அதே நாள் நள்ளிரவிற்குள், செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். மேலும், ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காத்திருப்பு போராட்டம் மற்றும் வேலைப்பளு காரணமாக, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பான பெரா அறிவித்தது.
கரூர் மாவட்டத்தில், 700க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை பணியாளர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டதால், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் குறைந்த அலுவலர்களுடன் இயங்கியது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோன்றிமலை வி.ஆர்.எஸ். வேல் மஹால், க.பரமத்தி அருகில் எல்லைமேடு வி.கே.டி. மண்டபம், கடவூர் அருகில் கீழமேட்டுப்பட்டி துர்க்கை அம்மன் கோவில் அருகில், குளித்தலை நகராட்சியில் காவேரி நகர் அண்ணா சமுதாய மண்டபம் ஆகிய இடங்களில் நடத்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பணிகள் பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் கொடுத்த மனுக்களை சில அதிகாரிகள் மட்டும் வாங்கி வைத்து கொண்டனர்.