/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையம் அருகே அரசு நிலம் மீட்பு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
/
வே.பாளையம் அருகே அரசு நிலம் மீட்பு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
வே.பாளையம் அருகே அரசு நிலம் மீட்பு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
வே.பாளையம் அருகே அரசு நிலம் மீட்பு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : ஜூன் 25, 2025 02:29 AM
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே ஹைஸ்கூல் மேடு பகுதியில், அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், ஒரு ஏக்கர் நிலத்தை தனியார் திருமண மண்டபத்தை சேர்ந்தவர்கள், ஆக்கிரமித்து வாகனம் நிறுத்தும் இடமாக, பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அரசு நிலத்தை மீட்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருந்தனர். இதனால், ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.
ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆக்கிரமிப்புகளை அகற்ற சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, புகழூர் தாசில்தார் தனசேகரன், மண்டல துணை தாசில்தார் சுதா உள்ளிட்ட, வருவாய்த்துறை அதிகாரிகள், வேலாயுதம்பாளையம் போலீசார் பாதுகாப்புடன் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, ஒரு ஏக்கர் நிலத்தை நேற்று மீட்டு அளந்த பின், கற்களை நட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.