ADDED : செப் 28, 2025 08:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வீரவள்ளி, கள்ளப்பள்ளி, வல்லம் பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. 30 நாட்களுக்கு முன்பு நாற்றங்காலில் நெல் விதைகள் துாவி விதை தெளித்தனர். தற்போது நெற்பயிர்கள் வளர்ந்து வருகின்றன. மேலும் விளை நிலங்களில் டிராக்டர் கொண்டு உழவு பணிகள் செய்யப்பட்டது.
விவசாய கூலி தொழிலாளர்களை கொண்டு, நாற்றங்காலில் வளர்ந்த நெற்பயிர்களை பறித்து, உழவு செய்யப்பட்ட வயல்களில் நடவு பணிகள் நடந்தன. மேலும் கட்டளை வாய்க்கால் பாசன தண்ணீர், நெல் வயல்களுக்கு பாய்ச்சப்படுகிறது. தற்போது நெற்பயிர்கள் நடவு பணி துவங்கியுள்ளதால், மற்ற இடங்களில் உள்ள விவசாயிகளும் நெல் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.