/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று அபாயம்
/
பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று அபாயம்
பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று அபாயம்
பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று அபாயம்
ADDED : செப் 29, 2025 02:29 AM
அரவக்குறிச்சி;அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில், தனியார் பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் மாணவர்கள், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் சரியாக கட்டப்படாததால், குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் அனைத்தும் சாலையோரத்தில் தேங்கி காணப்படுகிறது. பள்ளியின் பஸ் நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. முறையாக கட்டப்படாத கால்வாயால், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பேரூராட்சி அதிகாரிகள் இதை கவனித்து, கழிவுநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.