sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரைபுரண்டு ஓடும் ஆறுகள் கடைமடைக்கு தண்ணீர் வரல

/

கரைபுரண்டு ஓடும் ஆறுகள் கடைமடைக்கு தண்ணீர் வரல

கரைபுரண்டு ஓடும் ஆறுகள் கடைமடைக்கு தண்ணீர் வரல

கரைபுரண்டு ஓடும் ஆறுகள் கடைமடைக்கு தண்ணீர் வரல


ADDED : டிச 16, 2024 03:57 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் அமரா-வதி, நங்காஞ்சி, குடகனாறு என, 3 ஆறுகள் உள்ளன. தற்போது இந்த 3 ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால், கடைமடை பகுதியான அரவக்குறிச்சி பகுதிக்கு தண்ணீர் வருவ-தில்லை. மானாவாரி நிலங்களாக உள்ள இப்பகுதியில் முருங்கை, மாங்காய் போன்ற மரங்களை வளர்த்து விவசாயம் செய்து வரு-கின்றனர். இதற்கு கூட போதிய நீர் ஆதாரம் இல்லாமல் விவசா-யிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகள், பலமுறை குடகனாற்று நீரை வானம் பார்த்த பூமியாக உள்ள அரவக்குறிச்சி பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்த ஆட்சியில், இதற்-காக ஒரு ஆய்வு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு நடவடிக்கை எடுக்க பலமுறை அதிகாரிகளுக்கும், கலெக்ட-ருக்கும் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால், தமி-ழகம் முழுவதும் மலைக்கொட்டி வருகிறது. இதன் காரணமாக அமராவதி, குடகனாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால், வெள்ள நீரில் ஒரு பகு-தியாவது விவசாயத்திற்கு பயன்பட்டிருக்கும். ஆனால், கரைபு-ரண்டு ஓடும் ஆற்று நீரை விவசாயிகள் கண்ணீரோடும், கவலை-யோடும் பார்த்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us