/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்
/
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்
ADDED : செப் 24, 2024 01:09 AM
குளித்தலை: குளித்தலையில், காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., ஊத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை 10:00 மணிய-ளவில் குப்பாச்சி பட்டி-வேப்பங்குடி செல்லும் நெடுஞ்சா-லையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, பல்வேறு பணிகளுக்காக பூமி பூஜைக்கு சென்று கொண்டிருந்த, எம்.எல்.ஏ., மாணிக்கம் பொதுமக்களிடம் எதற்-காக சாலை மறியலில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டார்.
அவர்கள், 'கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக காவிரி குடிநீர் மற்றும் ஆழ்துளை குடிநீர் வழங்கவில்லை. பஞ்.,ல் புகார் தெரி-வித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுகிறோம்'
என்றனர்.உடனே எம்.எல்.ஏ., மாணிக்கம், பஞ்., தலைவர் திருமூர்த்தி மற்றும் துணைத் தலைவர், பஞ்., செயலாளர் அருள் ஆகியோ-ரிடம் இது குறித்து கேட்டார்.
ஊத்தம்பட்டி கிராமத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல், குடிநீர் வழங்குவதற்கு காவிரி குடிநீரில் இருந்து தனி மின் மோட்டார் அமைத்து தண்ணீர் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. நாளை குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார்.இதையடுத்து, பொது மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.