/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்
/
காவிரி குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்
ADDED : நவ 22, 2024 01:26 AM
காவிரி குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்
குளித்தலை, நவ. 22-
குளித்தலை அடுத்த, இனுங்கூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. பஞ்., பகுதி முழுவதும் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு மட்டும் காவிரி குடிநீர் வழங்காமல், போர்வெல் உப்புநீர் வழங்கப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என பலமுறை பஞ்.,தலைவர், யூனியன் கமிஷனர், எம்.எல்.எ., கலெக்டர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இனுங்கூர் பஞ்., அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மக்கள் மறியல் போராட்டம் செய்தனர். அப்போது, திருச்சி செல்லும் டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வி.ஏ.ஓ., குணசேகரன், பஞ்., தலைவர் பாலு, துணைத்தலைவர் செந்தில் ஆகியோர்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, குழாய் உடைப்பு ஏற்பட்டதால் காவிரி குடிநீர் வழங்க முடியவில்லை. இரவுக்குள் காவிரி குடிநீர் அல்லது கிணற்று தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், பொது மக்கள் கலைந்து சென்றனர்.