/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம்
/
அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம்
அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம்
அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம்
ADDED : மே 09, 2024 06:28 AM
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சி அருகே ஆண்டிமேடு பகுதியில், கருப்பசாமி என்பவர் நத்தத்தில் உள்ள நிலத்தில், 10 அடிக்கு சுவர் எழுப்பி வீடு கட்ட குழி தோண்டி வைத்துள்ளார். அந்த வழியாக கேணிக்கு தண்ணீர் எடுக்க செல்லும் பொதுமக்களுக்கும், கோவிலுக்கு வரவும், மயானத்திற்கு செல்லவும் இது முக்கிய பாதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் கேணிக்கு அருகில் செப்டிக் டேங்க் தொட்டி கட்டி உள்ளதால், குடிதண்ணீர் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ள, 10 அடி சுவர் மற்றும் செப்டிக் டேங்க் தொட்டியை அகற்ற வேண்டும் எனக்கூறி ஆண்டிமேடு பகுதியை சார்ந்த, 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே, கரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால், அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.