/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை மறியல் போராட்டம் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு
/
சாலை மறியல் போராட்டம் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு
சாலை மறியல் போராட்டம் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு
சாலை மறியல் போராட்டம் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு
ADDED : அக் 17, 2025 01:31 AM
குளித்தலை :இன்று நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம், பேச்சுவார்த்தைக்கு பிறகு கைவிடப்பட்டது.
குளித்தலை அடுத்த திம்மம்பட்டி பஞ்., முதலிக்கவுண்டனுாரில், நல்ல நிலையில் செயல்பட்டு வந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை, எவ்வித தீர்மானமுமின்றி பஞ்., நிர்வாகம் இடித்து அகற்றிவிட்டு, நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதையடுத்து, குளித்தலை யூனியன் நிர்வாகத்தை கண்டித்து தமிழர் தேசம் கட்சி சார்பில், 17ம் தேதி அய்யர்மலை பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், வரும் 31ல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் துவங்கும் என, உறுதியளித்ததின் பேரில் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழர் தேசம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன். கருர் கிழக்கு மாவட்ட செயலர் கள்ளை அருள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.