/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற உத்தரவு சாலை மறியல் போராட்டம் வாபஸ்
/
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற உத்தரவு சாலை மறியல் போராட்டம் வாபஸ்
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற உத்தரவு சாலை மறியல் போராட்டம் வாபஸ்
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற உத்தரவு சாலை மறியல் போராட்டம் வாபஸ்
ADDED : டிச 12, 2024 01:48 AM
கரூர், டிச. 12-
கரூர் அருகே, சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
கரூர் மாநகராட்சி, 1வது வார்டு கோதுார் பிரிவு பகுதியில், சாலைகளில் வாரந்தோறும் புதன்கிழமை வியாபாரிகள் கடைகள் அமைப்பது வழக்கம். நாளடைவில், சாலையில் ெஷட் அமைத்து, கடைகள் அமைப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோதுார் பகுதியை சேர்ந்த பொது மக்கள், கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்திருந்தனர்.
ஆனால், சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படாததால், மாநில பா.ஜ., ஓ.பி.சி., அணி துணைத்தலைவர் சிவசாமி தலைமையில், நேற்று ஈரோடு சாலையில், மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று புதன் கிழமை என்பதால், மாநகராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி கொள்ள உத்தரவிட்டனர்.
இதையடுத்து, நேற்று காலை நடப்பதாக இருந்த, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.